Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தேர்தலில் குறைவாக ஓட்டு வாங்கிய நிர்வாகிகளிடம் தி.மு.க., விசாரணை

லோக்சபா தேர்தலில் ஓட்டுக்கள் குறைந்தது குறித்து நிர்வாகிகளிடம் தி.மு.க., குழு விசாரணை நடத்த உள்ளது,’என, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் கட்சி கூட்டத்தில் பேசினார்.

 

தேனியில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டி தலைமையில் நடந்தது.

எம்.எல்.ஏ., சரவணக்குமார், துணைச் செயலாளர்கள் செந்தில்முருகன், திருக்கணணன்,பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை்வேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது: பூத் லெவல் நிர்வாகிகள் ஓட்டுக்கள் குறைந்த பகுதியில் கூடுதலாகபெற உழைக்கவேண்டும்.

போடி மீனாட்சிபுரம், பெரியகுளம் தென்கரை, தேனி வடக்கு பகுதியில் லோக்சபா தேர்தலில் ஓட்டுக்கள் குறைவாக பதிவாகி உள்ளன.

இப்பகுதியில் தேர்தல் பணி செய்த நிர்வாகிகளிடம் மாநில தி.மு.க.,ஐவர் குழுவி விளக்கம் கேட்க உள்ளனர்., என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *