ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
‘ஊராட்சிச் செயலர்கள் ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க’, கோரி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர்கள் சங்கம் சார்பில், ஊராட்சிச் செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் சுருளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் ரதவேல், செயற்குழு உறுப்பினர் சாகூல்ஹமீது, ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் மார்க்கண்டன், சின்னமனுார் ஒன்றியத் தலைவர் பிரசாந்த், மாவட்ட மகளிரணித் தலைவி தமிழ்செல்வி, மாநில மகளிரணி நிர்வாகி திலகவதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டத்தில உள்ள 130 ஊராட்சிகளில் 102 பேர் பணியில் உள்ளனர். 28 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக உள்ளன.
நேற்று 85 ஊராட்சிச் செயலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் ஊராட்சிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.