தங்க, வைரநகை கண்காட்சி
தேனியில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் சார்பில் ஆக., 21 ல் துவங்கிய தங்க, வைர நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
ஓட்டல் வெஸ்டர்ன் காட்சில் காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில் . கைவினைத் திறனுடன் உருவாக்கப்பட்ட தங்கம், வைரம், ஏராளமான டிசைன்களில் உயர்தர நகைகள் இடம் பெற்றிருந்தன. பார்வையாளர்கள் நகைகளை தேர்வு செய்து வாங்கினர். இதில் தோடு, நெக்லஸ், வளையல், மூக்குத்தி, திருமண நகைகள் இடம் பெற்றன.
உம்மிடி பங்காரு ஜீவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறியதாவது: இக்கண்காட்சியில் எங்களது ஷோரூமில் உள்ள நகைகளை காட்டிலும் ஏராளமான புதிய டிசைன்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எங்களின் ஒவ்வொரு நகையும் புதுமை, கைவினைத்திறன், நேர்த்தியான வடிவமைப்பில் உள்ளன. கலைநயமிக்க எங்களின் நகை கண்காட்சியை பார்வையிட வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம் என்றார். இன்றும் கண்காட்சி நடைபெறுகிறது.