போட்டித் தேர்வுகளை பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள் -முன்னாள் டி.ஜி.பி., ஆலோசனை
போட்டித் தேர்வுகளை பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும் என கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் டி.ஜி.பி., ஏ.எஸ். ராஜன் ஆலோசனை வழங்கினார்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற எளிய வழிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
முன்னாள் டி.ஜி.பி.,யும், ஹைதராபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய அகாடமியில் இயக்குநருமான ஏ.எஸ்.ராஜன் பேசுகையில்,
”போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பெண்கள் தைரியம், தன்னம்பிக்கை, மன உறுதியுடன் எதிர் கொள்ள வேண்டும். பெண்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். அவர்களைப் பற்றி அவர்களே அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
மேலும் கூட்டு மனப்பான்மை, நேர மேலாண்மை பெண்களுக்கு அவசியம்’, என்றார். வணிகவியல் துறை தலைவர் வாணி, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.