ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் அடுத்த வாரம் துவக்கம்
தேனி : மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை வேறு ஊராட்சிகளுக்கு மாற்றும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.
மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 130 ஊராட்சிகள் உள்ளன.
இதில் 96 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் தற்போது பணியில் உள்ளனர். இது தவிர ஜன., 6ல் ஒன்றியங்கள், ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஊராட்சி செயலாளர்களை வேறு ஊராட்சிகளுக்கு மாற்றும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.
இது பற்றி ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் செயலாளர்களை மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒன்றியம் வாரியாக கலந்தாய்வு நடத்தி ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி அடுத்த வாரத்தில் ஜன.,10க்குள் ஊராட்சி செயலாளர்கள் பலரை வேறு ஊராட்சிகளுக்கு மாற்ற பணிகள் நடந்து வருகிறது என்றனர்.