வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி துவக்கம்
மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்(பி.எல்.ஓ.,க்கள்) மூலம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணி அக்.,18 வரை நடக்கிறது.
வீடுகள் வாரியாக இப்பணியை பி.எல்.ஓ.,க்கள் மேற்கொள்ள உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர் நீக்கம், இடம்பெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளபட உள்ளன.
மேற்குறிப்பிட்ட பணிகளை செய்ய இயலாதவர்கள் தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். ஆன்லைனில்www.nvsp.inஎன்ற இணைய முகவரி,voter helplineசெயலியில் விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,29ல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஜன., 6ல் வெளியிடப்படும். பி.எல்.ஓ.,க்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.