கம்பு பயிர் விளைச்சல் அமோகம்
கூடலுார்: தொடர் மழை காரணமாக மானாவாரி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த கம்பு பயிர் விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கழுதைமேடு, கல்லுடைச்சான்பாறை, பெருமாள் கோயில், ஏகலுாத்து உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி கம்பு பயிரை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.
தொடர் மழையால் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாக கம்பு அதிகம் பயன்படுகிறது.
பசுக்கள் வளர்ப்பவர்கள் மொத்தமாக வாங்கி இருப்பு வைப்பார்கள். தற்போது கம்பு விளைச்சல் நன்றாக இருப்பதால் வியாபாரிகளும் குவிந்துள்ளனர். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.