பெண்களுக்கு இலவச ஆட்டோக்கள் வழங்கல்
கூடலுார் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பெண்களுக்கு மூன்று இலவச ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.
பெண்கள் சுயமாக உழைத்து முன்னேறுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கூடலுார் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முதற்கட்டமாக மூன்று பெண்களுக்கு இலவச எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன
அறம் சிறப்பு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆட்டோக்களை கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, கம்பம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பயனாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சேர்மன் குமரப்பன், உதவி ஆளுநர் செல்வகுமார், தலைவர் சித்திரேசன், செயலாளர் விமல்குமார், பொருளாளர் அப்துல்ரஹீம், குமார் செய்திருந்தனர்.
விழாவில் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.