சின்னச்சுருளி அருவியில் சீரான நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேகமலை சின்னச்சுருளி அருவியில் குளிப்பதற்கு ஏற்ற சீரான நீர் வரத்தால் சுற்றுலா வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் கோம்பைத்தொழு அருகே உள்ளது சின்னச்சுருளி அருவி. மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள வெள்ளிமலை, மேகமலை பகுதியில் பெய்யும் மழையால் சின்னச் சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்படும்.
இந்த அருவி விழும் இடத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மலைப் பகுதியில் பெய்த மழையால் சின்னச் சுருளி அருவியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதிக்க வில்லை.
மழைக்குப் பின் தற்போது அருவியில் ஏற்பட்டுள்ள சீரான நீர் வரத்து சுற்றுலாப் பயணிகளின் குளியலுக்கு ஏற்றதாக உள்ளது.
தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து தற்போது சுற்றுலா வரும் பயணிகள் மலைப் பகுதியில் அமைந்துள்ள அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.