குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்ற ஏட்டுக்கு பாராட்டு விழா
கூடலுார் : குமுளி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் மாரியப்பன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ‘ஆல் இந்தியா மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் சாம்பியன்ஷிப் 2025’ சார்பாக நடத்தப்பட்ட குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றார்.
இவர் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் நடந்த குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இவருக்கு குமுளி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
எஸ்.ஐ., ஆசிர்வாதம் உள்ளிட்ட போலீசார், தனிப்பிரிவு போலீசார்கள் கலந்து கொண்டனர்.