பருவ மழையால் உழவுப்பணி மும்முரம்
போடி பகுதியில் பருவ மழை பெய்து வருவதால் உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் பல மாதங்களாக மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. போடி பகுதி கிணறுகளின் நீர் மட்டமும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. மழையை மட்டுமே நம்பி இருந்த மானாவாரி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. பருவமழையால் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர். விவசாய பணிமேற்கொள்வதில் ஆர்வம் காட்டினர். சிலமலை, சூலப்புரம், சில்லமரத்துப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் உழவு பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில,’ தற்போது பெய்யும் தொடர் சாரல் மழையால் உழவு செய்து நிலக்கடலை, மொச்சை, தட்டப்பயறு விதைப்பு செய்தும், ஊடு பயிராக காட்டாமணக்கு பயிரிட உள்ளோம்’. என்றனர்.