இரு மாநில போலீசார் சோதனை -ஓணம் பண்டிகைக்கு கடத்தலை தடுக்க நடவடிக்கை
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு எல்லைப் பகுதியான குமுளியில் தமிழக கேரள போலீசார் இணைந்து போதைப் பொருள் கடத்தலை தடுக்க வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்: கேரள வனத்துறை சார்பில் புதிய படகு
16 hour(s) ago
கேரளாவில் ஓணம் பண்டிகை அடுத்த மாதம் நடக்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் கேரளாவுக்கு அதிகமாக இருக்கும்.
போலிமது, எரிசாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக இரு மாநில போலீசார் இணைந்து எல்லைப் பகுதியில் வாகனச் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பீர்மேடு கலால்துறை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தடுப்பு அலுவலர்கள் சிபு ஆண்டனி, அஜேஷ்குமார், உத்தமபாளையம் மதுவிலக்கு சிறப்பு எஸ்.ஐ., கோபிராஜ், போலீசார்கள் கவாஸ்கர், வாஞ்சிநாதன் ஆகியோர் கொண்ட இரு மாநிலக் குழுவினர் எல்லைப் பகுதியான குமுளி வனப்பகுதியை ஒட்டியுள்ள ரோசாப்பூக் கண்டம், வட்டக் கண்டம், நால்வழி அணை, போர் பே டேம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கேரளாவிற்கு அனுமதிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை முடியும் வரை இச்சோதனை தொடரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.