கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் மண்டல பூஜை
ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் 48 ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12 ல் முடிந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் தினமும் பல்வேறு பூஜைகள் தொடர்ந்தது.
நேற்று 48 ம் நாள் முடிவைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடந்தது.
பூஜிக்கப்பட்ட புனித நீர் உள்ள குடங்களை கோயில் வளாகத்தைச் சுற்றி சுமந்து சென்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.