தகராறில் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சொத்து பிரச்னையில் முன் விரோதம் காரணமாக ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட வழக்கில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் கண்ணன் 40. இவரது குடும்பத்தினருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பா காளிமுத்துவுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. கண்ணனும்
இவரது தம்பி பாலகிருஷ்ணன் 38. இருவரும் தோட்டத்திற்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பினர். அட்டணம்பட்டி மெயின் ரோடு பகுதியில் சித்தப்பா காளிமுத்து, மகன் கதிர்வேல், மனைவி சற்குணம், கதிர்வேல் மனைவி ஆகிய நான்கு பேர் இவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, கண்ணன் டூவீலரை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதில் கதிர்வேல் அரிவாளால் கண்ணனை வெட்டினார். தடுக்க வந்த பாலகிருஷ்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காளிமுத்து, சற்குணம், கதிர்வேல் மனைவி ஆகியோர் கம்பால் இருவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
தேவதானப்பட்டி போலீசார் கதிர்வேல் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சற்குணம் புகாரில்: முன் விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் எங்களை வழிமறித்து, எனது அண்ணன்
கண்ணன் மீது நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கினை வாபஸ் பெறக்கோரி, எனது கணவர் காளிமுத்துவை அடித்தும், என்னை அரிவாளால் வெட்டினார்.
எனது மகன் கதிர்வேலை இருவரும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். நான் அணிந்திருந்த 3 பவுன் தங்கசெயினை காணவில்லை என புகார் தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் பாலகிருஷ்ணன், கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.-