குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கல்
மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி கோரி குறைதீர் கூட்டம், சிறப்பு முகாம்கள், மக்களுடன் முதல்வர் முகாம்களில் மனு அளித்திருந்தனர்.
மனு அளித்த குழந்தைகள் பாதுகாவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றனர்.
கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த நிகழ்வில் தனியார் பெரு நிறுவனங்களின் சமூக கூட்டமைப்பு பொறுப்பு நிதி மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த 21 குழந்தைகளுக்கு ரூ.2.10 லட்சம், பெற்றோர்களின் ஒருவரை இழந்த 71 குழந்தைகளுக்கு ரூ.3.55 லட்சம் என 92 குழந்தைகளுக்கு ரூ.5.65 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், பள்ளிகல்வித்துறை, மாவட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா தலைமையிலான அலுவலர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.