ஆற்றல் இல்லா குளிர் அறை பயிற்சி
திண்டுக்கல் காந்திகிராம வேளாண் கல்லூரி மாணவர்கள் அன்பு நிதி , ஜெகதீஷ், விவேகானந்தன், மனோ, ஹரிஹரன் ஆகியோர் சுருளிப்பட்டியில் விவசாயிகளுக்கு ஆற்றல் இல்லா குளிர் அறை அமைப்பது, அதன் பயன்கள் பற்றி விளக்கினர்.
எரிசக்தி இல்லாமல் இயற்கையாகவே காய்கறி, பழங்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை கூறினார்கள். இது நேரடி பண்ணை சேமிப்பு முறையாகும். செங்கல், மணலால் கட்டப்படும் ஒரு குளிர் அறை. இதற்கு எந்த ஆற்றலும் தேவை இல்லை.
ஆவியாகும் செயல்முறை கொள்கையின் செயல்படும்: இது வெளிப்புற வெட்பத்தில் 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் குறைக்கிறது. 95 சதவீத ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இது எளிய,சிக்கன தொழில் நுட்பம் என விளக்கினர்.