தேனியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி பங்களா மேட்டில் த.வெ.க., சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், தி.மு.க., அரசை கண்டித்தும், தேனியில் தேங்கும் குப்பையை முறையாக அகற்ற வேண்டும், மீறு சமுத்திர கண்மாயில் ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் உள்ளிட்டவைவலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
மகளிரணி நிர்வாகிகள் திவ்யசூர்யா, திவ்யா, கஸ்துாரி, நிர்வாகிகள் விக்னேஷ், ராஜசீராளன், பால, ராஜ்குமார்,ஜெயந்த், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.