விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற வரவேற்பு
விளையாட்டுத்துறையில் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, வெற்றி பெற்று தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் ரூ.6ஆயிரம் பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் வயது ஆக., 31ல் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வேறு ஓய்வூதிய திட்டங்களில் பயன்பெறுபவர்கள், முதியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற இயைத்தில் செப்.,30 மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.