அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு
அல்லிநகரம் மெயின் ரோடு முனியாண்டி. இவரது வீட்டில் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன், கார்த்திக், ராதாகிருஷ்ணன், ரெங்கநாதன் உட்பட 28 பேர் சட்டவிரோதமாக ஒன்று கூடி, முன் அறிவிப்பு, போலீசார் அனுமதி இன்றி 3 அடி விநாயகர் சிலையை துாக்கி வாகனத்தில் ஏற்றி, முல்லையாற்றில் கரைப்பதற்காக ரோட்டை மறித்து பொது மக்களுக்கு இடையூறு செய்தனர்.
இவர்கள் மீது வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.