இடைநின்றவர்களை பள்ளி, கல்லுாரியில் சேர்க்கை முகாம்
மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையத்தில் 4 நாட்கள் உயர்வுக்கு படி திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து முகாமிற்கு அழைத்து வர போலீஸ், கல்வித்துறை உள்ளிட்ட அரசுதுறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, அதற்கும் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அதற்கு மேல் படித்த மாணவர்கள் பள்ளிகள், கல்லுாரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் சேர்க்க உயர்வுக்கு படி திட்டம் 2022-2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாவட்டத்தில் இரு ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு மாவட்டத்தில் பெரியகுளத்தில் செப்.,11,21ல், உத்தமபாளையத்தில் செப்.,14, 25ல் உயர்வுக்குப்படி முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
செப்.,11ல் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரியில் முகாம் நடக்கிறது.
இடைநின்ற மாணவர்கள் கண்டறிந்து முகாமிற்கு அழைத்து வர தலைமை ஆசிரியர்கள், போலீசார், குழந்தைகள் நல குழு உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.