நல்லாசிரியருக்கு பாராட்டு விழா
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம், கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் மகேஷ் விருது வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியருக்கு கிராம பொதுமக்கள்,மாணவ, மாணவிகள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டி கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாதவி வரவேற்றார்.
கிராம நிர்வாகிகள் செந்தில், சேகர், செல்வம், சத்யராஜ், மகேந்திரன் உட்பட பலர் பாராட்டி பேசினர்.
ஆசிரியர்கள் ஹரி கோவிந்தன், மயில்வாகனன், செங்குட்டுவன், பாண்டியம்மாள், அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.