Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அலைபேசியில் பேசியபடி 3 வது மாடியில் தவறி விழுந்தவர் பலி

தேவதானப்பட்டி,:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெற்றி 40, வீட்டின் இரண்டாவது மாடியில் அலைபேசியில் பேசியவாறு சென்ற போது தவறி விழுந்து பலியானார்.

டி.வாடிப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் வெற்றி 40. மனைவி அருள்மொழி 35. இரு மகள்கள் உள்ளனர். மார்ச் 15ம் தேதி இரவு 9:30 மணிக்கு இரண்டாவது மாடியில் அலைபேசியில் வெற்றி பேசிக்கொண்டிருந்தார். இவர் மாடியில் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம். மனைவி அருள்மொழி மாடிக்கு உணவை எடுத்துச் சென்றார். அங்கு வெற்றி இல்லை. தேடிய போது அலைபேசியில் பேசியபடி 25 அடி உயரத்திலிருந்து வெற்றி தவறி கீழே விழுந்தது தெரிந்தது. இதில் பின் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெற்றியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் வெற்றி இறந்தது தெரிந்தது. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *