முடங்கிய பஸ் போக்குவரத்து 6 ஆண்டுகளுக்கு பின் துவக்கம்
சைலன்ட்வாலி எஸ்டேட்டுக்கு முடங்கிய பஸ் போக்குவரத்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (செப்.8) முதல் மீண்டும் துவங்குகிறது.
மூணாறில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சைலன்ட்வாலி எஸ்டேட்டுக்கு கேரளா அரசு பஸ் இயக்கப்பட்டது.
2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில் சைலன்ட்வாலி ரோட்டில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அப்பகுதிக்கு ஜீப், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் சென்று வந்த நிலையில் பஸ் போக்குவரத்து தடைபட்டது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, சமீபத்தில் மூணாறு, சைலன்ட்வாலி இடையே ரோடு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் சைலன்ட்வாலிக்கு ஆறு ஆண்டுகளாக முடங்கிய பஸ் போக்குவரத்து செப்.8 முதல் மீண்டும் துவங்கியது.
அன்று முதல் சைலன்ட்வாலி, தொடுபுழா இடையே கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது.
நேரம்: மூணாறில் இருந்து தினமும் காலை 6:50 மணிக்கு சைலன்ட்வாலிக்கு புறப்படும். அங்கிருந்து காலை 8:10 மணிக்கு புறப்பட்டு மூணாறு வழி தொடுபுழா செல்லும்.
தொடுபுழாவில் மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5:10 மணிக்கு சைலன்ட்வாலி சென்றடையும்.
அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு மூணாறில் உள்ள பஸ் டிப்போவுக்கு புறப்படும்.