கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி முத்துலட்சுமி 50. நான்கு ஆண்டுகளுக்கு முன் முருகன் இறந்துவிட்டார். தனது மகன் மாற்றுத்திறனாளி கருப்புத்துரை 23. யுடன் நடுப்புரவு காவல்குடிசை எதிரே சாம்சுந்தர்என்பவரது தென்னந்தோப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தனர். இருவரும் தோட்டத்தில் மின்மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். முத்துலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். தோட்டத்திற்கு திரும்பிய முத்துலட்சுமி மகனை காணாமல் தேடினார். கிணற்றுக்கு அருகே கருப்புத்துரை டூவீலர் சாவி, அவரது காலணி கிடந்துள்ளது. மின்மோட்டாரை சுவிட்ச் ஆப் செய்ய முயன்ற போது மகன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என முத்துலட்சுமி சந்தேகப்பட்டார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் 30 அடி ஆழ கிணற்றில் தேடினர். கருப்புத்துரை உடல் மீட்கப்பட்டது. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.