யோகா போட்டியில் பங்கேற்க மாணவிகள் தேர்வு
இலங்கையில் 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள யோகா போட்டிகளில் பங்கேற்க கம்பம் நாகமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடந்தது. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற பலர் இலங்கையில் வரும் ஜனவரியில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க தகுதி போட்டி பழநியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தான்யா, வேதிக் ஷா, ரூபிகா ஆகியோர் 11 முதல் 14 வயது பிரிவிலும், கவிஸ்குமார் 8 முதல் 11 வயது பிரிவிலும் இலங்கையில் நடைபெறவுள்ள யோகா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தேர்வான மாணவிகளை பள்ளியின் தாளாளர் காந்தவாசன், இணை செயலர் சுகன்யா பாராட்டினார். நிகழ்ச்சியில் முதல்வர் புவனேஸ்வரி , யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம், துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் பங்கேற்றனர்.