எஸ்டிபிஐ நிர்வாகிகள் தேர்வு
தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் கம்பம் நகர உட்கட்சி தேர்தல் மாவட்ட தேர்தல் அதிகாரி சையது காதர், ஹக்கிம் ஆகியோர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் கம்பம் நகர புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.
இதில் நகரத் தலைவராக சாதிக் அலி, நகர செயலாளராக நிஜாமுதீன், பொருளாளராக சம்சுல் ஹுதா, நகர துணைத்தலைவர்களாக அப்துல் சலாம், சிராஜ்தீன், நகர இணைச்செயலாளர்களாக மைதீன் மற்றும் சுருளி, நகர செயற்குழு உறுப்பினராக சையது இப்ராகிம் மற்றும் தாவூத் நிஷார் சிராஜ்தீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.