கழிவு நீர் தேங்கிய பிரச்னையில் சாதியை சொல்லி தாக்குதல் நடத்திய தாய் , மகனுக்கு ஆயுள் தண்டனை : எஸ். சி-எ ஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தேனி, பிப். 16: ஆண்டிபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டியில் கழிவு நீர் வீட்டின் முன்பாக தேங்கிய பிரச்சனையில் தாயையும், மகனையும் சாதியை சொல்லித் திட்டி தாக்கிய மற்றொரு தாய், மகனுக்கு தேனி எஸ்சி-எஸ்டி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பெருமாள்கோவில் பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் சேதுபதி(23).
இதே தெருவை சேர்ந்தவர் மாயி மகன் விஜய்(23). இருவரும் நண்பர்கள். கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி சேதுபதி வீட்டில் இருந்து வெளியேறிய கழிவு நீர், விஜய் வீட்டின் முன்பு தேங்கியுள்ளது. இதனால் விஜயின் தாயார் தமிழ்செல்வி(45) சேதுபதியின் வீட்டிற்கு முன்பாக சென்று அவரது தாய் மொக்கப்பிள்ளையை சத்தம் போட்டுள்ளார்.இதில் வாக்குவாதம் முற்றியதையடுத்து, தமிழ்செல்வி, விஜய் ஆகியோர் சேர்ந்து மொக்கப்பிள்ளையையும், அவரது மகன் சேதுபதியையும் சாதியை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். மேலும், விஜய் அரிவாள்மனையில் சேதுபதியை கையில் வெட்டி காயப்படுத்தினார்