Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

430 ஆசிரியர்களால் கற்பித்தல் பணி பாதிப்பு

மாவட்டத்தில் டிட்டோ ஜாக் அறிவித்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் 430 ஆசிரியர்கள் பங்கேற்றதால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் நடக்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ‘டிட்டோஜாக்’ என அழைக்கப்படுகிறது.

இந்த குழு சார்பில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் இடமாறுதல் வழங்காததை கண்டித்தும், வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் வழங்கும் முறையை கைவிட வலியுறுத்தியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் குழு சார்பில் மீண்டும் போராட்டம் அறிவக்கப்பட்டது.

மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99 உள்ளன. இங்கு 2882 பணியிடங்களில் 2775 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

நேற்று 430 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 88 பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். பள்ளிகளுக்கு 2368 ஆசிரியர்கள் மட்டும் வருகை தந்திருந்தனர். சில பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் சில ஆசிரியர்களை மட்டும் வைத்து அனைத்து வகுப்புகளும் கவனிக்கப்பட்டன. இதனால் பாடங்கள் நடத்தவில்லை.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *