Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

வளரிளம் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

‘பதினைந்து வயதுக்கு உட்பட்ட வளரிளம் பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதால் அதற்கான பணிகளை உடனே துவக்க வேண்டும்.’ என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

சமீப காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனைகள் செய்வது குறைந்து விட்டது. 2023ல் தமிழகத்தில் 8 ஆயிரத்து 534 பேர்களுக்கு கர்ப்பவாய் புற்று நோய் கண்டறியப்பட்டது. இதனால் 2030க்குள் 15 வயது பெண் குழந்தைகள் 90 சதவீதம் பேர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கவில்லை. சமீபத்தில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியது.

தமிழகத்தை பொறுத்த வரை 2014ல் இருந்து 2023 வரை கர்ப்ப வாய் புற்றுநோய் அதிகரித்து வந்துள்ளது. எனவே கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்தவும், 15 வயதிற்கு உட்பட சிறுமிகளுக்கு து பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *