வி.சி.க., மாநாட்டில் பங்கேற்குமா தே.மு.தி.க.,
தேனியில் விஜயபிரபாகரன் பதில்
”வி.சி.க., மதுஒழிப்பு மாநாட்டிற்கு தே.மு.தி.க.,வை அழைத்தால் பங்கேற்பது பற்றி கட்சி தலைமை அறிவிக்கும்” என விஜய காந்த் மகனான விஜயபிரபாகரன் கூறினார்.
தேனியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. நேற்று படக்குழுவுடன் இணைந்து விஜயபிரபாகரன், தேனியில் விஜய் நடித்த கோட் சினிமாவை தியேட்டரில் பார்த்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
‘கோட்’ சினிமாவில் ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விஜயகாந்தை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. படம் நன்றாக உள்ளது. விஜய், வெங்கட்பிரபு எங்கள் குடும்பத்தில் ஒருவர். வெங்கட்பிரபுவை எனது தந்தை நிறஞ்ச மனசு படத்தில் நடிக்க வைத்தார். கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறி தான் ‘கோட்’ படத்தில் பயன்படுத்தி உள்ளார்.
அந்த காட்சிகள் நன்றாக உள்ளது. மற்ற படங்களில் விஜயகாந்த் உருவத்தை பயன்படுத்தினாலும் தே.மு.தி.க., தலைமைக்கு தகவல் தெரிவித்து பயன்படுத்த கூறி உள்ளோம். கேப்டன் ஏ.ஐ., தோற்றம் பிடிக்கவில்லை என்பது சிலரது தனிப்பட்ட கருத்து. செந்துாரப்பாண்டி படத்தில் இருந்து விஜயகாந்த், விஜய் பந்தம் தொடர்கிறது.
வி.சி.க., மதுஒழிப்பு மாநாட்டிற்கு தே.மு.தி.க.,வை அழைத்தால் பங்கேற்பது பற்றி கட்சி தலைமை அறிவிக்கும் என்றார்.
சண்முகபாண்டியன் கூறியதாவது, ”எனது படத்தில் விஜயகாந்த் தோற்றம் பற்றி படக்குழுவினர் தெரிவிப்பார்கள்” என்றார்.