மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
தேனி : மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்களில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட தினமலர் அலுவலகத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தேனி நியூஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகன் கொடி ஏற்றினார். பொருளாளர் நடராஜ், நிர்வாகிகள், குடியிருப்போர் ராதாகிருஷ்ணன், சீனிவாசன், செல்லி, பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில் கலெக்டர் ஷஜீவனா கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார். அரசு துறைகளின் சார்பில் ரூ.3.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தேசிய கொடி ஏற்றிய பின் பறக்க விடப்பட்ட பலுான் கொடி கட்டப்பட்டு இருந்த கொடி சிக்கி, பறந்தவாறே இருந்தது. விழாவில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முத்துமாதவன், வளர்மதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சிவபிரசாத் கொடி ஏற்றினார். தேனி கூடுதல் எஸ்.பி., கேல்கர்சுப்ர்மண்ய பாலசந்திரா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெரால்ட் அலெக்ஸாண்டர், சுகுமாறன், வினோஜி, டி.எஸ்.பி.,க்கள் முன்னிலை வகித்தனர்.
தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.,க்கள் தீவான்மைதீன், மணிகண்டன், நிர்வாக அலுவலர், அமெச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
லட்சுமிபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தேனி முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் கொடி ஏற்றினார். தேனி அமர்வு நீதிபதி அனுராதா, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், சார்பு நீதிமன்ற நீதிபதி கீதா, இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளர் பரமேஸ்வரி, தேனி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி, வழங்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி., கேல்கர்சுப்ரமண்ய பாலசந்திரா கொடி ஏற்றினார். எழுத்தர் பால்பாண்டி உள்ளிட்ட 6 போலீசார் பங்கேற்றனர்.
தேனி தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் கொடி ஏற்றினார். உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன், நிலைய உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் முன்னிலை வகித்தனர். அலுவலர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேனி அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இளவரசன் கொடி ஏற்றினார். எழுத்தர் முருகன், எஸ்.ஐ., கண்ணன், சிறப்பு எஸ்.ஐ., மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட
போலீசார் பங்கேற்றனர்.
தேனி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜவஹர் கொடி ஏற்றினார். எஸ்.ஐ., இளங்குமரன், போலீசார் பங்கேற்றனர்.
தேனி முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் கொடி ஏற்றினார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
தேனி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கொடி ஏற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், விழாவில் பங்கேற்றனர்.
பள்ளிகளில் விழா
சீலையம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலாளர் சண்முகநாதன் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் தலைமை வகித்து கொடி ஏற்றி, வாழ்த்திப் பேசினார். பள்ளிச் செயலர் பாண்டிக்குமார்வரவேற்றார். தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி குடியரசு தின சிறப்புகள் குறித்து பேசினார்.
மாணவி பாலபிரித்திகா,குடியரசு தினம் உருவான வரலாறு’ என்ற தலைப்பில் தமிழிலும், மாணவி மைத்ரி பிரபா குடியரசு தினத்தில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் உரையாற்றினர். ஜூனியர் ரெட் கிராஸ், ஜெ.ஆர்.சி., சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். உதவி தலைமை ஆசிரியை மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் மீனாகுமாரி
வரவேற்றார். சங்க துணைத் தலைவர் பாண்டியராஜன், பொதுச் செயலாளர் மகேஸ், இணைச் செயலாளர் ராஜமன்னார், பள்ளிச் செயலாளர் ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பரந்தாமன் கொடி ஏற்றி, சிறப்புரை ஆற்றினார். பள்ளி கல்விச் சங்கச்செயலாளர் பாக்யகுமாரி முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் ஜெ.ஆர்.சி., மாணவர்கள்,தேசிய பசுமைப்படை மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது.
மாணவ, மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம்,தேசிய பாடல் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குபரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் வினோத்குமார் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.
முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிவிடுதி செயலாளர் சேகர் கொடி ஏற்றினார். பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார் வரவேற்றார். இணைச் செயலாளர்கள்வன்னியராஜன்,
அருண்குமார் சிறைப்புரை ஆற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,பணியாளர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை முதல்வர்ராஜேஸ்வரி செய்திருந்தார்.
வெங்கடாசலபுரம் வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளியின் சபைத்தலைவர் சீனிவாசன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார்.
பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. சபை செயலாளர் அனந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், கண்ணதாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் சங்கத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் கொடிஏற்றினார். பள்ளிச் செயலாளர் வாசு, துணைச் செயலாளர் ராஜேஸ், பொருளாளர் சுந்தரவடிவேலன், தேனி கம்மவார் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளைமுதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராமசாமி கொடி ஏற்றினார். சங்கத்தின் தலைவர்நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் பிரகாசம்வரவேற்றார். ஏ.டி.ஓ., அபினாஷ் நன்றி கூறினார். ஆசிரியர்கள் முனியாண்டி, சேகர், நேசராஜா, மாணவர்கள்கலந்து கொண்டனர்.
கல்லுாரிகளில் விழா
தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி கொடிஏற்றி, உரை ஆற்றினார்.
கல்லுாரிச் செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் ரவிச்சந்திரன்,
பொருளாளர்தாமரைக்கண்ணன், முதல்வர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், பணியாளர்கள்பங்கேற்றனர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் பவுன்மாரிசெல்வம் செய்திருந்தார்.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில், சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் நவநீதன் கொடிஏற்றினார்.
சங்கத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச் செயலாளர் மகேஸ், செயலர் தாமோதரன், பொருளாளர்வாசுதேவன், முதல்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலர் குடியரசு தின உரை ஆற்றினார்.பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில், ஆட்சிமன்றக்கழு உறுப்பினர் தர்மராஜன் கொடி ஏற்றினார்.
உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர்பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், முதல்வர்சித்ரா, கல்வித்துறை டீன் கோமதி, துணை முதல்வர்கள் சுசீலா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி, விடுதி காப்பாளர் உமாஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட 9 தலைப்புகளில் மாணவிகளின்இந்திய நிர்வாகத்துறைகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டுஅலுவலர் சரண்யா நன்றி தெரிவித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் உறவின்முறை பொருளாளர் கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி தலைமை வகித்தார். கல்லுாரிச் செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பெண்கள் விடுதி செயலாளர்
ஜீவகன் கொடி ஏற்றினார்.
கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப்- கலெக்டர் ரஜத்பீடன் கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மருதுபாண்டி கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் குமார் கொடி ஏற்றினார். நிலைய மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, செவிலியர் கண்காணிப்பாளர் ஸ்ரீவரமங்கை, டாக்டர்கள், நர்ஸ்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் நகராட்சியில் தலைவர் சுமிதா கொடி ஏற்றினார். கமிஷனர் தமிஹாசுல்தானா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., மலர்விழி கொடி ஏற்றினார்.
வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சின்னராஜா, பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொருளாளர் செல்வக்குமார பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி, ஆசிரியர்கள் ஆசிரியைகள் பங்கேற்றனர். தென்கரை பேரூராட்சியில் செயல் அலுவலர் குணாளன் கொடி ஏற்றினார். தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
வடுகபட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் உமா சுந்தரி கொடி ஏற்றினார். தலைவர் நடேசன் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தாமரைக்குளம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஆளவந்தார் கொடி ஏற்றினார். தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் செயலர் பாண்டியராஜ் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
எண்டப்புளி ஊராட்சியில் செயலர் பிச்சைமணி கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.. ஜெயமங்கலம் ஊராட்சியில் செயலர் கோபால் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வடபுதுப்பட்டி ஊராட்சியில் செயலர் மணிகண்டன் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
கீழ வடகரை ஊராட்சியில் செயலர் லெனின் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
ஜல்லிபட்டி ஊராட்சியில் செயலர் கோபாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். மேல்மங்கலம் ஊராட்சியில் செயலர் முருகன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் கொடி ஏற்றினார். பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
கூடலுார்: நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர் லோகந்துரை, மேலாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இனிப்பு வழங்கப்பட்டன.
என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் கொடி ஏற்றினார். தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராஜாங்கம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டேனியல் கொடி ஏற்றினார்.
திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மூர்த்திராஜன், தலைமை ஆசிரியர் அதிபர் முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமர் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சி நடந்தது.
வடக்கு, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி கொடி ஏற்றினார். ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சத்தியபாமா முன்னிலையில், தாளாளர் பொன்குமரன் கொடி ஏற்றினார்.வ.உ.சி. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண் பிரசன்னா கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பா.ஜ., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் முருகேசன் கொடி ஏற்றினார்.
மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் சகிலா கொடி ஏற்றினார். ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் முதல்வர் பாலகார்த்திகா கொடி ஏற்றினார்.
இந்து ஆரம்பப் பள்ளியில் தாளாளர் முத்துக்குமரன் முன்னிலையில், தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கொடி ஏற்றினார்.
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் கொடி ஏற்றினார். எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகத்தில் நகரத் தலைவர் அஜ்மீர்கான் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சபீர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியங்கா உட்பட பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
லோயர்கேம்ப் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினார்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் வசந்தன், முதல்வர் ரேணுகா முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி கொடி ஏற்றினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கம்பம்: கம்பம் நகராட்சியில் கமிஷனர் உமாசங்கர் கொடி ஏற்றினார். தலைவர் வனிதா, பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், துப்புரவு அலுவலர் அரசகுமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கனி கொடி ஏற்றினார். அதிகாரிகள், ஊராட்சிச் செயலர்கள் பங்கேற்றனர்.
க.புதுப்பட்டி நகர் நலச் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் கவுரவ தலைவர் ரவி கொடி ஏற்றினார். தலைவர் சுப்ரமணியன், செயலர் ரெங்கராஜ், துணை தலைவர் சம்பத்
உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தெற்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வடக்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கொடி ஏற்றினர்.
நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் கொடி ஏற்றினார். மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. முதல்வர் மோகன், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் காந்த வாசன் கொடி ஏற்றினார். இணைச் செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அச்சுத நாகசுந்தர் கொடி ஏற்றினார். முதல்வர் கருப்பசாமி, ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவர் சவுந்திரராசன் கொடி ஏற்றினார். தாளாளர் கவிதா, முதல்வர் சுவாதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்.ஆர், இன்டர்நேசனல் பள்ளியில் தலைவர் ராசாங்கம் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் அசோக் குமார், பொருளாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உத்தமபாளையம்: ஆர்.டி.ஒ. அலுவலத்தில் ஆர்.டி.ஒ. தாட்சயிணி கொடி ஏற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். பி.டி.ஓ., மக்கத்தம்மாள் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
கருத்தராவுத்தர் கல்லுாரியில் முன்னாள் பேராசிரியர் மன்சூர் கொடி ஏற்றினார். தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எஸ்.ஏ. பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஜியாவுல் ஹக் கொடி ஏற்றினார். பள்ளியின் தாளாளர் கண்ணன்,
செயலர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
விகாசா மெட்ரிக் மேல்நிலையில் தலைவர் இந்திரா கொடி ஏற்றினார். செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், ஆவிலா தெரசா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கோபிநாத் கொடி ஏற்றினார். தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் முத்துகுமார், பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் செயலர் மாரிமுத்து கொடி ஏற்றினார். நிர்வாக குழு தலைவர் சிவமணி, தலைமை ஆசிரியர் முனிராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போடி: போடி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கொடி ஏற்றினார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர் சையதுகான், போடி நகரச் செயலாளர் பழனிராஜ், முன்னாள் நகரச் செயலாளர் ஜெயராமன், நகர அவைத் தலைவர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அரண்மனை சுப்பு உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சுனில், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், தாலுகா ஸ்டேஷனில் எஸ்.ஐ., விஜய், அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி கொடி ஏற்றினர்.
ஆண்டிபட்டி: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் கொடி ஏற்றினார். துணை தாசில்தார் மகாலட்சுமி, அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி பி.டி.ஓ., சரவணன் கொடி ஏற்றினார். துணை பி.டி.ஓ., மீனாகுமாரி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கொடி ஏற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வினிதா கொடி ஏற்றினார். பேரூராட்சி தலைவர் சந்திரகலா, முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பேரூராட்சி அலுவலர்கள், துாய்மை, பணியாளர்கள் பங்கேற்றனர்.
Adve