அபாயத்தில் கவியரசு கண்ணதாசன் நுாலக கட்டடம்
பெரியகுளம் வடுகபட்டி நுாலக கட்டடம் பில்லர், சுவர்கள் சேதமான நிலையில் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இப்பகுதியில் கவியரசு கண்ணதாசன் நுாலகத்தை 1999 பிப் 4ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 2400 சதுரடியில் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளன. 3,600 சந்தாதாரர்கள், நுாலக வளர்ச்சி குழுவின் தலைவர் டாக்டர் செல்வராஜ், 110 புரவலர்கள் உள்ளனர். தினமும் 120 வாசகர்களும், மாதம் 3,000 பேர் படிக்கின்றனர். சந்தாதாரர்கள் மாதம் 600 நுால்கள் முதல் 700 நுால்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கின்றனர். வார விடுமுறை வெள்ளிக்கிழமை தவிர காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை நுாலகம் செயல்படுகிறது.
போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் போட்டித்தேர்வு நூல்களும் ஆன்லைன் வசதியும் உள்ளது.
வடுகபட்டி, சேடபட்டி, மேல்மங்கலம், காமக்காபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நுாலகத்தை பயன்படுத்திச் செலகினறனரநூலகம் வருகின்றனர்.
கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சுவர்கள், மேல்தளம் விரிசல் ஏற்பட்டும், கட்டடத்தின் அஸ்திவாரமான பில்லர்கள் முழுமையாக சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக் காலங்களில் மழை தண்ணீர் நுாலகத்தில் விழுகிறது.
இடியுடன் மழை பெய்யும் காலங்களில் வாசகர்கள் நுாலகம் செல்வதற்கு தயங்குகின்றனர்.
இங்கு பணிபுரியும் நுாலகர்கள் அச்சத்துடன் வேலை செய்யும் நிலை உள்ளது. கட்டடம் இடிந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-