பாத யாத்திரை சென்ற பெண் பக்தர் விபத்தில் காயம்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில் பாத யாத்திரை பெண் பக்தர் காயமடைந்தார்.
தேனி பங்களாமேடு தெருவைச் சேர்ந்த ஆனந்தமுருகன் மனைவி பாண்டியம்மாள் 50.
தேனியைச் சேர்ந்த பக்தர்களுடன் பழநிக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். பெரியகுளம் வத்தலகுண்டு ரோடு, காட்ரோடு அருகே செல்லும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியது.
இதில் காயமடைந்த பாண்டிம்மாள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவதானப்பட்டி போலீசார் டூவீலரை ஓட்டிச் சென்றவரை தேடி வருகின்றனர்.