பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை பா.ஜ., கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தேனியில் நடந்த விழாவில் பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். நகர் பகுதியில் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், நிர்வாகி சசிராமன், தேனி நகரத் தலைவர் மதிவாணன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர். பெரியகுளத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், உத்தமபாளையத்தில் நகரத் தலைவர் தெய்வம், சின்னமனுாரில் நகரத் தலைவர் லோகேந்திரராசன், போடியில் நகரத் தலைவர் சந்திரசேகர் முன்னிலையில் விழா நடந்தது. அந்தந்த பகுதியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கி, கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் பெயரில் பல்வேறு கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்டன.