குப்பை கிடங்கில் தீ; சுற்றுச்சூழல் பாதிப்பு
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை கிடங்கு சுடுகாடு அருகே உள்ளது. பேரூராட்சியின் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் தனியாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை கிடங்கில் இரவில் மர்ம நபர்கள் தீ வைத்து செல்வதால் ஏற்படும் புகை இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
குப்பை கிடங்கு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி, குடியிருப்புகள் அதிகம் உள்ளன. குப்பையில் இருந்து வரும் புகை பலருக்கும் சுவாச பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பை கிடங்கில் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.