மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.6 ஆயிரம் மானியம்
மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அரசு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கு கிறது. சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் பாண்டி கூறியிருப்பதாவது :
மக்காச் சோள சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டேருக்கு ரூ.2500 மதிப்புள்ள 10 கிலோ விதை ரூ. 300 மதிப்புள்ள நுண்ணுாட்ட உரங்கள், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வேளாண் இயற்கை இடு பொருள்கள், ரூ.500 மதிப்புள்ள ஒரு லிட்டர் நானோ திரவ உரம், இதர செலவினங்களுக்கு ரூ.500 என ரூ.6550 வழங்கப்படுகிறது. சின்னமனுார் வட்டாரத்தில் 50 எக்டேருக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், மக்காச் சோளம் 160 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 10 முதல் 15 டன் வரை கிடைக்கும்.
குவிண்டால் ரூ.2500 வரை விலை கிடைக்கிறது. 90 நாட்களிலேயே தட்டையை அறுத்து கேரளாவிற்கு யானைகள், கால்நடை தீவனத்திற்கு விற்கலாம்.
எனவே மக்காச் சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார்.