பணிக்கு வராத உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆண்டிபட்டி தாலுகாவில் செப்.,18 ல் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்திய போது அங்கு பணிபுரியும் இளநிலை உதவியாளர் சரவணன் பணியில் இல்லை. இது பற்றி அலுவலர்களிடம் விசாரித்தார். விசாரணையில் சரவணன் 14 நாட்களுக்கும் மேலாக எந்த தகவலும் தெரிவிக்காமல், பணிக்கு வாராமல் இருப்பது தெரியவந்தது.
அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.