Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை

மேகமலை பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்க வனத்துறை கூடுதல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பல பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதிகளாகும்.

இங்கு வன உயிரினங்கள் நடமாட்டமும், ரோட்டை ஒட்டியுள்ள மணலாறு,ஹைவேவிஸ் அணைகள் பார்க்க சுற்றுலா பயணிகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர், சாப்பாடு, திண்பண்டங்கள், மது உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பாட்டில்களையும், பாலிதின் பைகளை வீசி செல்கின்றனர்.

இரவில் வனத்தை விட்டு வெளியே வரும் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகள், காட்டு மாடுகள் பாலிதீன் பைகளை உணவுடன் சாப்பிடுகிறது.

இது வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தாகும். மக்காத பாலிதீன் பைகளால் மண்ணின் வளமும் பாதிக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை ஒட்டி நடப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது.

இப்போது ஹைவேவிஸ் மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளை சோதனை செய்து, பாலிதின், பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். அதையும் மீறி சிலர் கொண்டு செல்கின்றனர்.

எனவே மேகமலை பகுதியில் வனத்துறையினர் வழக்கமாக ரோந்து சென்று சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் பைகளை பறிமுதல் செய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *