மூணாறில் தர்ணா போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் ஊதியம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். வேலை நேரம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை என நிர்ணயிக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர் சங்கத்தினர் மூணாறு, வட்டவடை ஆகிய பகுதிகளில் தபால் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
மூணாறில் நடந்த போராட்டத்திற்கு ஊராட்சி உறுப்பினர் ரீனாமுத்துகுமார் தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் லெட்சுமணன் துவக்கி வைத்தார்.
தேவிகுளம் ஊராட்சி தலைவர் மின்ஸிரோபின்சன், உறுப்பினர்கள் கட்டபொம்மன், பாண்டியராஜ், சி.ஐ.டி.யு. மூணாறு பகுதி தலைவர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.