விடுமுறையளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினமான நேற்றுமுன்தினம் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நாளில் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது விதி. விடுமுறையில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுப்போ அளிக்க வேண்டும் என்பது விதி.
தேசிய தொழிலாளர் நல ஆணையத்தின் உதவி ஆணையர் மனுஜ்ஷ்யாம் ஷங்கர் தலைமையில் பெரியகுளம் தொழீலாளர் துணை ஆய்வர் மற்றும் தேனி, பெரியகுளம், போடி மற்றும் கம்பம் ஆகிய தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் நேற்று தேதி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அகிக்கப்பட்டுள்ளதா எனவும், மாற்று விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 51 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.