முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு – மேலும் குறைக்க வலியுறுத்தல்
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 900 கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் குறைக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 121.40 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 343 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 2905 மில்லியன் கன அடியாகும்.
நவ.,22ல் நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக இருந்தது.
நவ.,23ல் 967 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியிலிருந்து 900 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை.
கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான துவக்கப் பணிகள் நடந்து வருகிறது.
மழையின்றி நீர் மட்டம் குறைந்து வருவதால் இரண்டாம் போக சாகுபடிக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதால் நீர் இருப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பை 500 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 81 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.