மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி
தேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன் 41.
இவரது மனைவி ராஜபுஷ்பம் 37. மூன்று மகன்கள் உள்ளனர். 2 வது மகன் காதணி விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க ஜெயமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றார்.
ஜெயமங்கலம் ஆண்டிபட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி மார்ச் 9 இரவில் விழுந்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-