ஆன்லைனில் மாநில தேர்தல் வினாடி வினா போட்டி
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு மாநில வினாடி வினா போட்டி நவ.,13ல் ஆன்லைன் மூலம்நடத்தப்பட உள்ளது.
வாக்காளர்களின் ஜனநாயக கடமை, தேர்தலின் முக்கியத்துவம், ஓட்டளிப்பதின் முக்கியத்துவம் பற்றி தேர்தல் கமிஷன் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைபடிக்கும் மாணவர்களுக்கு தேர்தல் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.
வட்டாரம், மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தி மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த போட்டிகள் நேரடியாக நடைபெறும். ஒரு குழுவில் இரு மாணவர்கள் இடம் பெறுவர். மாவட்டத்திற்கு இரு குழுக்கள் வீதம் மாநில போட்டிக்கு தகுதி பெறும்.
மாநில அளவிலான போட்டி நவ.13ல் ஆன்லைன் மூலம் நடக்க உள்ளது. மாவட்ட அளவில் குழுவை தேர்தல் பிரிவு, கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.