மின் இணைப்பு வழங்காததால் பயன் இல்லாத நவீன கழிப்பிடம்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட குமணன்தொழு ஆதிதிராவிடர் காலனியில் எஸ்.பி.எம்., திட்டத்தில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.2.40 லட்சம் செலவில் மின் மோட்டார், பைப் லைன் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது. இப்பகுதி பெண்கள் துணிகள் துவைப்பதற்கு வசதியாக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் சலவை கூடமும் கட்டப்பட்டுள்ளது. மின் விநியோகத்திற்கான இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் பல மாதங்களாக இவற்றை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். கழிப்பறை மற்றும் சலவைக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி ஒன்றிய, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.