முதல் பரிசு வென்றது மார்க்கையன் கோட்டை மாடு: இரட்டை மாட்டு வண்டி போட்டி
தேவாரம் : தேனி தெற்கு மாவட்ட, உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் தேவாரம் – போடி ரோட்டில் நடந்தது. இதில் மார்க்கையன்கோட்டை நித்திய செல்வம் மாட்டிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
தேவாரத்தில் இரட்டை மாட்டு வண்டி போட்டி தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன் தலைமையில் நடந்தது. உத்தமபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் குமரன், தெற்கு மாவட்டப் பொருளாளர் பால்பாண்டி, தேவாரம் பேரூராட்சி துணைச் செயலாளர் பிரபாகரன், தேனி மாவட்ட ரேக்ளா சங்க செயலாளர் நித்திய செல்வம் முன்னிலை வகித்தனர்.
கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.
போட்டியில் 200 க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாடு பிரிவுக்கான போட்டியில் மார்க்கையன்கோட்டை நித்திய செல்வம் மாடு முதலிடம் பெற்று ரூ. 30 ஆயிரமும், பூசாரணம்பட்டி பரமசிவம் மாடு 2 ம் இடம் பெற்று ரூ.25 ஆயிரமும், தேவாரம் ஈஸ்வரன் மாடு 3 ம் இடம் பெற்று ரூ.20 ஆயிரமும், கே.கே.பட்டி முருகன் மாடு 4-ம் இடம் பெற்று ரூ.10 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு வென்றது.
நடுமாடு பிரிவுக்கான போட்டியில் கூடலூர் அறிவழகன் மாடு முதலிடம் பெற்று ரூ. 25 ஆயிரமும், ஓடைப்பட்டி சந்தோஷ் மாடு 2 ம் இடம் பெற்று ரூ. 20 ஆயிரமும், சுருளிபட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மாடு 3 ம் இடம் பெற்று ரூ.15 ஆயிரமும், கூடலுார் முருகேசன் மாடு 4 ம் இடம் பெற்று ரூ.8 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு வென்றது.
கரிச்சான் மாடு பிரிவுக்கான போட்டியில் கம்பம் ரஹீம் மாடு முதல் இடம் பெற்று ரூ. 20 ஆயிரமும், உப்பார் பட்டி கவுசிக் மகாதேவ் மாடு 2ம் இடம் பெற்று ரூ.15 ஆயிரமும், கம்பம் திருமலை பின்னத்தேவர் மாடு 3 ம் இடம் பெற்று ரூ.10 ஆயிரமும், கூடலுார் வனராஜ் மாடு 4 ம் இடம் பெற்று ரூ.7 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசு வென்றது.
மேலும் பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு பிரிவுக்கான போட்டிகளில் ஏராளமான இரட்டை மாடுகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.