கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மூணாறு : தொடுபுழா அருகே பதிபள்ளியை சேர்ந்த சசிதரனை 50, கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அனிஷூக்கு 40, ஆயுள் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தொடுபுழா நான்காம் வகுப்பு கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலையான சசிதரன், தண்டனை பெற்ற அனிஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்தது. 2020 ஜனவரி 15ல் அனிஷ் வீட்டில் சசிதரன் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பலகையால் தாக்கி, கொலை செய்த அனிஷ், உடலை 500 மீட்டர் துாரம் சுமந்து சென்று, பின் மூங்கில் காட்டிற்குள் வீசினார்.
போலீசார் அனிஷ், அவரது மனைவி சவுமியா, நண்பர் சோமன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடுபுழா நான்காம் வகுப்பு கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
அனிஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.2. லட்சம் அபராதம் விதித்து, நீதிபதி சீதா தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இன்றி சவுமியா, அனீஷின் நண்பர் சோமன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.