வெளிச்சம் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
தேனி: தேனி வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கவும், இரும்பு தடுப்புகளை ரோடு சந்திப்பில் இருந்து சற்று தள்ளி வைக்க கோரிக்கை எழுந்தள்ளது.
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இருந்து ஊருக்குள் செல்பவர்கள் பைபாஸ் ரோட்டினை கடந்து செல்லும் நிலை உள்ளது. கிராம ரோடு, பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் போதிய அளவில் வெளிச்சம் இல்லை.
மேலும் ரோடு சந்திக்கும் இடத்தில் போலீசாரால் பேரிகார்டு (இரும்பு தடுப்பு) வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வேகமாக வரும் வாகனங்கள் இரும்பு தடுப்பு அருகில் வந்து திடீரென வேகத்தை குறைக்கின்றன.
அதே நேரம் ரோட்டை கடக்கும் பாதசாரிகள், வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருவதும் தொடர்கிறது. விபத்துக்களை குறைக்க அப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும். இரும்பு தடுப்புகளை ரோடு சந்திக்கும் இரு பகுதிகளிலும் 50 மீ., தள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.