Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மதுரை — போடி அகல ரயில் பாதை மின் மயமாக்கல் பணி நிறைவு 110 கி.மீ. , வேகத்தில் சோதனை ஓட்டம்

போடி: மதுரை – –போடி அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றதால் 110 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான இரவு நேர சோதனை ஓட்டம் நேற்று முன் தினம் நடந்தது.

மதுரை – போடி 160 கி.மீ., வேகத்திலும், அதற்கு அதிகப்படியான வேகத்தில் இயங்கக் கூடிய வகையில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழித்தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு முன்பு 120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

நேற்று முன்தினம் மதுரையில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயில் இரவு 10:05 மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. மறு மார்க்கத்தில் 90 கி.மீ., வேகத்தில் இரவு 11:00 மணிக்கு மதுரை புறப்பட்டு சென்றது.

ரயில் பாதையில் இணையும் மேம்பாலப் பகுதிகள், முக்கிய வளைவுகள், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள மின் வழித்தட பயன்பாட்டிற்கான கருவிகள், மின்மயாக்கப்பட்ட நிலையில் இரவில் இடையூறுகள் உள்ளதா என்பதற்கான சோதனை ஓட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *