தமிழ்புலிகள் அமைப்பினர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டம்
தேனி, டிச. 3: தேனியில் தமிழ்புலிகள் அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயமுத்தூரில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து பலியானவர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் வீரவணக்க பேரணி செல்ல முயன்ற தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை.திருவள்ளுவனை போலீசார் கைது செய்தனர். இதனைக்கண்டித்து, தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே கம்பம் சாலையில் தேனி மாவட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். தென்மண்டல இளம்புலிகள் அணி துணை செயலாளர் விடுதலைசேகர், கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் பாலா, மதுரைவீரன், மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாதுகாப்புக்கு இருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையிலான கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.