மாவட்ட காங்கிரஸ் தலைவர் : காங்கிரஸ் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்
தேனி, டிச. 3: தேனி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில ஏழை, எளிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைகளை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் அறக்கட்டளை மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 20 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதித்துள்ளது.
இதன்படி, தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர்.முருகேசன் தலைமை வகித்து 5 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். இதில் தேனி நகர்மன்ற முன்னாள் தலைவர் முனியாண்டி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சின்னப்பாண்டி, தேனி நகர துணைத் தலைவர் முகமதுமீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.